வைகோவுக்கு விதிக்கப்பட்ட ஓராண்டு சிறை தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டுமென உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2009ம் ஆண்டு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விடுதலை புலிகளுக்கு ஆதரவாகவும்,இந்திய இறையாண்மைக்கு எதிராகவும் செயல்பட்டதாக கூறி அப்போதைய ஆட்சி காலத்தில் இருந்த திமுக சார்பில் ஆயிரம் விளக்கு பகுதி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு, புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதன்படி, வழக்கின் மீதான விசாரணை முடிவில் வைகோவிற்கு ஓராண்டு சிறை தண்டனையும், 10 ஆயிரம் அபராதமும் விதித்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இத்தீர்ப்பிற்கு எதிராக வைகோ உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை அளித்தார். அந்த மனுவானது இன்று விசாரணைக்கு வந்தது. இதையடுத்து மனு மீதான விசாரணையில், மேல்முறையீடு மனு மீதான விசாரணை முடியும் வரை வைகோவிற்கு விதிக்கப்பட்ட ஓராண்டு சிறை தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. மேலும் வைகோ அளித்த மேல்முறையீட்டு மனு குறித்து ஆயிரம் விளக்கு பகுதி காவல் ஆய்வாளர்கள் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டதோடு, இந்திய ஒருமைப்பாட்டை பாதிக்கும் வகையில் இனி பேசக்கூடாது என்றும் வைகோவுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.