Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

மருந்து அடிக்க வந்தோம்…. தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்…. போலீஸ் நடவடிக்கை….!!

பெண் ஒருவரின் வீட்டிற்குள் சென்று கத்தியை காட்டி மிரட்டி நகை பறிக்க முயற்சி செய்த மர்ம நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வீட்டு வசதி வாரியம் பகுதியில் சம்பத் என்பவர் வசித்து வருகிறார். இவர் மின்சார வாரியத்தில் செயற்பொறியாளராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் திருமண நிகழ்ச்சிக்காக சம்பத் சென்ற போது வீட்டில் மனைவியும், மகளும் தனியாக இருந்துள்ளனர். அப்போது இருசக்கர வாகனத்தில் 3 நபர்கள் சம்பத் வீட்டிற்கு சென்று அலுவலகத்தில் தூய்மை பணியாளராக வேலை பார்த்து வருவதாகவும், வீட்டில் கொசு மருந்து அடிக்க வேண்டும் என நந்தினியிடம் அவர்கள் கூறியுள்ளனர். இதனை நம்பிய நந்தினி மூன்று பேரையும் வீட்டிற்குள் அனுமதித்துள்ளனர்.

அதன் பின் உள்ளே சென்ற மர்ம நபர்கள் கதவை உள் தாழ்ப்பாள் போட்டு விட்டு கத்தியை காட்டி மிரட்டி நந்தினி கழுத்தில் அணிந்திருந்த நகையை கழட்டி கொடுக்கும் படி மிரட்டியுள்ளனர். இதனால் பயந்து போன நந்தினி திருடன் என சத்தம் போட்டுள்ளார். இதை கேட்டு ஓடி வந்த மகள் ஷாலினியை பார்த்த மர்ம நபர்கள் அவரையும் மிரட்டி அமைதியாக இருக்கும் படி கூறியுள்ளார். இதனையடுத்து நந்தினியின் சத்தத்தை கேட்ட அக்கம்பக்கத்தினர் ஓடி வந்துள்ளனர். இதை பார்த்த மர்ம நபர்கள் நந்தினியை தாக்கியுள்ளனர்.

அதனால் அவர் மயங்கி கீழே விழுந்ததால் மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி ஓட முயற்சி செய்துள்ளனர். அதில் ஒருவனை பொதுமக்கள் பிடித்து அடித்து உதைத்துள்ளனர். பின்னர் இது குறித்த காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தகவலின் படி விரைந்து சென்ற காவல்துறையினர் அந்த நபரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது விசாரணையில் அவர் சிலம்பரசன் என்பதும், அவருடன் வந்தவர்கள் கோவிந்தசாமி மற்றும் முருகன் என்பதும் காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் அவர்கள் 3 பேரையும் கைது செய்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |