கனமழைப் பெய்ததால் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மாங்கரை மேற்குத் தெருவில் பெரியசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு பஞ்சவர்ணம் என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் பஞ்சவர்ணம் கணவரை இழந்து விட்டு தனிமையில் வசித்து வந்திருக்கிறார். தற்போது மாங்கரை பகுதியில் கனமழை பெய்துள்ளது. அப்போது பஞ்சவர்ணம் தனது வீட்டின் முன்வாசலில் நாற்காலியில் அமர்ந்து மழையை வேடிக்கை பார்த்துள்ளார்.
அந்த நேரம் எதிர்பாராதவிதமாக அவரது வீட்டின் மேற்கூரை சரிந்து கீழே விழுந்தது. இதில் வீட்டின் பக்கவாட்டுச் சுவர் இடிந்து பஞ்சவர்ணத்தின் மீது விழுந்துள்ளது. இந்த விபத்தில் படுகாயமடைந்த பஞ்சவர்ணம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.