Categories
தேசிய செய்திகள்

நாடு கடத்தப்படுவதற்கு எதிர்ப்பு .. விஜய் மல்லையா மனு இன்று விசாரணை..!!

இந்தியாவிற்கு நாடு கட்டப்பட்டதற்கு  எதிராக தொழிலதிபர் விஜய் மல்லையா தாக்கல் செய்த  மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை  இன்று பிரிட்டன் உயர்நீதிமன்றம் துவங்குகிறது.

இந்திய வங்கிகளில் 9,000 கோடி கடன் வாங்கிய விஜய் மல்லையா அதை திருப்பி செலுத்தாமல், லண்டனுக்கு கடந்த 2014ஆம் ஆண்டு தப்பி சென்றார். அவரை நாடு கடத்த உத்தரவிடக் கோரி லண்டனில் உள்ள நீதிமன்றத்தில் இந்திய அரசு சார்பில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் விஜய் மல்லையா கடன்களை திருப்பிச் செலுத்தாததற்கான ஆதாரங்கள் அனைத்தும் சரியாக உள்ளதால் அவரை இந்தியாவுக்கு நாடு கடத்த எந்த தடையுமில்லை என்று கடந்த 2018 ஆம் ஆண்டு தீர்ப்பளித்தது.

இதனையடுத்து நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரி பிரிட்டன் உயர் நீதிமன்றத்தில் விஜய் மல்லையா சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவை ஏற்ற நீதிமன்றம் விஜய் மல்லையா மேல்முறையீடு செய்ய அனுமதி வழங்கியது. அதனடிப்படையில் விஜய் மல்லையா தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை பிரிட்டன் உயர்நீதிமன்றம் இன்று துவங்குகிறது.

Categories

Tech |