தளபதி விஜய் நடிப்பில் உருவாகிய “வாரிசு” படம் வருகிற பொங்கலுக்கு வெளியாக இருக்கிறது. இப்படத்துக்கு பின் விஜய் மீண்டுமாக லோகேஷ் கனகராஜூடன் இணையவுள்ளார். விக்ரம் திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்கு பின் இப்படம் உருவாக இருப்பதால் அதிக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. முன்பாக தளபதி விஜய் நடிக்கும் 67-வது திரைப்படத்துக்கு வில்லனாக முதலில் நடிகர் பிருத்வி ராஜ் தேர்வு செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியது.
அதன்பின் அவர் தேதி பிரச்சனையில் விலகியதால், நடிகர் விஷால் வில்லனாக இணைந்துள்ளதாக பேசப்பட்டது. அதனை தொடர்ந்து விஷாலுக்கு பதில் நடிகர் அர்ஜூன் விஜய்க்கு வில்லனாக நடிக்க உள்ளதாகவும், சம்பளமாக ரூபாய்.4 கோடி பேசப்பட்டதாகவும் தகவல் வெளியாகியது. மேலும் இப்படத்தில் நடிகர் மன்சூர் அலிகான் வில்லனாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியது. அதனை உறுதிபடுத்தும் வகையில் நான் விஜய் 67 திரைப்படத்தில் நடிப்பது உண்மைதான் என மன்சூர் அலிகான் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் டைரக்டர் கௌதம் வாசுதேவ் மேனனும் விஜய் 67 படத்தில் நடிக்க இருப்பதாக நேர்கானல் ஒன்றில் தெரிவித்துள்ளார் .