சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமான விஜய் ஆண்டனி இப்போது நடிப்பில் பிஸியாகி உள்ளார். இவர் நடிப்பில் வெளியாகிய நான், சலீம், பிச்சைக்காரன், கொலைகாரன் ஆகிய திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது. அதிலும் குறிப்பாக கடந்த 2016ம் வருடம் சசி இயக்கத்தில் இவர் நடித்த பிச்சைக்காரன் திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட்டாகியது.
இப்போது விஜய் ஆண்டனி அக்னி சிறகுகள், காக்கி, தமிழரசன், பிச்சைக்காரன் 2, கோடியில் ஒருவன், கொலை, மழை பிடிக்காத மனிதன், வள்ளி மயில் ஆகிய படங்களை தன் கைவசம் வைத்துள்ளார். இதில் தமிழரசன் படத்தை டைரக்டர் பாபு யோகிஸ்வரன் இயக்கியுள்ளார். இந்த படத்தின் நாயகியாக நடிகை ராமயா நம்பீசன் நடித்துள்ளார்.
அத்துடன் மலையாள நடிகர் சுரேஷ் கோபி, பாலிவுட் நடிகர் சோனு சூட், யோகிபாபு, சங்கீதா க்ரிஷ் உட்பட பலர் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்து உள்ளனர். இந்த திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். இந்நிலையில் தமிழரசன் படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டு உள்ளது. பெரும் எதிர்பார்ப்பில் உருவாகி இருக்கும் இந்த டிரைலர் சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.