Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய் நடிக்கும் “வாரிசு” தமிழ் திரைப்படம் இல்லையா?… அப்போ வம்சி சொன்னது பொய்தானா?…. கேள்வியெழுப்பும் ரசிகர்கள்….!!!!

வருகிற பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விஜய் நடிக்கும் வாரிசு மற்றும் அஜித் நடிக்கும் துணிவு படம் ரிலீஸ் ஆக இருக்கிறது. இதற்கிடையில் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்றாலும், உத்தேச தேதியாக ஜனவரி 12-ம் தேதி கூறப்படுகிறது. இதன் காரணமாக 2 நடிகர்களின் ரசிகர்களும் படத்தின் ரிலீஸ்காக ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். அண்மையில் வாரிசு பட இயக்குனர் வம்சி பேட்டியளித்தபோது, இந்த படம் முழுக்க தமிழ் திரைப்படம் என்று கூறியிருந்தார்.

இந்த திரைப்படம் முழுக்க தமிழ் படமாக இருந்திருந்தால், எதற்காக வாரிசு படத்தின் தெலுங்கு பதிப்பான வாரசுடு படத்துக்காக மகேஷ் பாபு மற்றும் ராம் சரணை நாடியிருக்க வேண்டும். அப்போது தயாரிப்பாளர் தில்ராஜூ கூறியது அனைத்தும் பொய்யா..? அல்லது இயக்குனர் வம்சி கூறியது பொய்யா..? படத்தின் புரோமோஷனுக்காக இயக்குனரும், தயாரிப்பாளரும் மாறி மாறி பேசுகின்றனர் என்று நெட்சன்கள் கேள்வி எழுகின்றனர். மேலும் வாரிசு நேரடி தமிழ் திரைப்படமா? அல்லது தெலுங்கு பதிப்பின் தமிழ் டப்பிங் படமா என்று நெட்சன்கள் மற்றும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Categories

Tech |