அண்மை காலமாக நம்பிக்கை தரும் இளம் நட்சத்திரமாக திரையுலகில் வலம் வருபவர் நடிகர் அசோக்செல்வன். சென்ற சில ஆண்டுகளுக்கு முன்பு வரை வருடத்திற்கு ஒன்று (அ) இரண்டு திரைப்படங்களில் நடித்து வந்த அசோக்செல்வன், அண்மை காலமாக பல படங்களில் தொடர்ந்து நடிக்கிறார். இது தொடர்பாக அசோக்செல்வன் கூறியதாவது “ஒரு படத்தை முடித்து விட்டு தான் அடுத்த திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் நான் இருந்தேன்.
அப்போது நடிகர் விஜய்சேதுபதி தான் என்னை அழைத்து அப்படி நடிக்க வேண்டாம். ஒரே சமயத்தில் பல படங்களை ஒப்புக்கொண்டு நடிக்க வேண்டும். மேலும் ஒரு படத்தை முடித்துவிட்டு தான் அடுத்த படத்தில் நடிக்கலாம் என காத்திருப்பது திரையுலக பயணத்தில் ஒரு முட்டுக் கட்டையாக அமைந்துவிடும் என்று கூறினார். அதனை தொடர்ந்து நான் பல்வேறு படங்களில் நடித்து வருகிறேன். அவர் கூறியதுபோல 5 வருடங்களுக்கு முன் வெளியாகவேண்டிய நான் நடித்த வேழம் என்ற படம் இந்த ஆண்டு தான் ரிலீஸ் ஆனது” என்று அவர் கூறியுள்ளார்..