Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய் சேதுபதிக்கு என்றுமே ஒரு தனி இடம் இருக்கு!… வெளியான காலண்டர்…. புகைப்பட கலைஞர் பெருமிதம்…..!!!!

விஜய்சேதுபதியின் பரம ரசிகரான புகைப்பட கலைஞர் எல்.ராமச்சந்திரன் இதற்கு முன்னதாக ஹூயூமன், கலைஞன் என்ற தலைப்பின் கீழ் விஜய்சேதுபதி காலண்டரை வெளியிட்டார். இதற்காக அவர் தனியாக விஜய்சேதுபதியை வைத்து போட்டோஷூட் நடத்தி உள்ளார். அதன்படி இந்த வருடம் “தி ஆர்ட்டிஸ்” என்ற பெயரில் காலண்டரை உருவாக்கி உள்ளார். இந்த காலண்டருக்கு ஓவியர் சிற்பி ஓவியம் தீட்டியிருக்கிறார்.

நூற்றுக்கும் அதிகமான கலைஞர்கள் சுமார் 10 நாட்களுக்கும் மேல் ஒவ்வொன்றையும் தனித்துவமாக வடிவமைத்துள்ளனர். இதுபற்றி புகைப்பட கலைஞர் எல்.ராமச்சந்திரன் கூறியதாவது “தன்னுடைய பணிகளில் முழு அர்ப்பணிப்புடனும் தன்னம்பிக்கையுடனும் செயலாற்றும் நடிகர்களில் விஜய்சேதுபதிக்கு என்றுமே ஒரு தனி இடம் இருக்கிறது.

இந்த படத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு தலைப்பிற்கும், அந்தந்த துறை சார்ந்த நிபுணர்களை அணுகி, அதன் நுணுக்கங்களை உள்வாங்கி, அந்தந்த கதாபாத்திரமாகவே தன்னை மாற்றியிருக்கிறார். இதன் வாயிலாக கிடைக்கும் பணம் காசா அறக்கட்டளை மூலம் கல்வி மற்றும் மருத்துவ நலன்களுக்காக பயன்படுத்தப்படும்” என்று அவர் கூறினார்.

Categories

Tech |