Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே..!! என்ன அழகு…! “கேப்டன்” மருமகள்களின் வைரலாகும் போட்டோ…!!

நடிகர் விஜயகாந்தின் இரண்டு மருமகள்களின்  புகைப்படமும் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

ரசிகர்களின் பேராதரவுடன் தமிழ் சினிமாவில் வலம் வந்தவர் நடிகர் விஜயகாந்த். ரஜினி, கமல் என இரு நடிகர்கள் சினிமாத் துறையில் பிரபலமாகி கொண்டிருந்தாலும் தன்னுடைய திறமையின் மீது கொண்ட நம்பிக்கையில்  விஜயகாந்த் தமிழ் சினிமாவில் முன்னணி இடத்தை பிடித்தவர். இவரது சண்டை காட்சிகளுக்கேன்றே தனி ரசிகர் பட்டாளம் உருவானது.

1990 ஆம் ஆண்டு நடிகர் விஜயகாந்த் பிரேமலதா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதியருக்கு சண்முகபாண்டியன், விஜய பிரபாகர் என 2 மகன்கள் உள்ளனர். இவர்கள் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் நடிகர் விஜயகாந்தின் இரு மருமகள்களின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

Categories

Tech |