இணையதளத்தில் ரசிகர் கேட்ட கேள்வி ஒன்றுக்கு விஜய் அளித்த பதில் ஏழு வருடங்களுக்குப் பிறகு தற்போது டுவிட்டரில் டிரெண்ட் ஆகி வருகிறது.
பிரபல நடிகரும் மக்களால் தளபதி என்று செல்லமாக அழைக்கப்படும் நடிகர் விஜய் அனைவருக்கும் மிகவும் பிடித்த நபர். அதற்கு பல காரணங்கள் உள்ளன. அதில் முக்கிய காரணங்களில் ஒன்று, நடிகர் விஜய் எதிரியையும் நேசிக்கக் கூடிய ஒருவர். நம்மை யார் வெறுத்தாலும் ,அவர்களுக்கு நம்மை பிடிக்கவில்லை எனில் அவர்களை விட்டு சற்று விலகி இருப்போம் என்று எண்ணுபவர்.
இவருக்கு எதிராக தமிழகத்தில் பலர் எதிர் கருத்துகளை சரமாரியாக ஒவ்வொரு முறையும் பதிவிட்டு வருகிறார்கள். ஆனால் எதற்கும் கவலைப்படாமல் அவற்றைக் கண்டுகொள்ளாமல் கடந்து செல்பவர் விஜய். சில சமயங்களில் அப்படி கருத்து தெரிவித்தவர்களுக்கு நிதானமாக பொறுமையாக பதில் அளிக்கக் கூடியவரும் கூட.
அந்த வகையில், விஜய்க்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்த கத்தி படம் வெளிவந்த புதிதில் ஒரு ரசிகர் ட்விட்டரில் கொக்கோ கோலா விளம்பரத்தில் நடித்து விட்டு கத்தி படத்தில் அதற்கு எதிராக பேசுகிறீர்களே இதற்குப் பெயர் என்ன ? என கேள்வி கேட்டுள்ளார். அதற்கு விஜய் நானும் தவறுகளை திருத்திக்கொள்ளும் சாதாரண மனிதன் தான். இனி இப்படி ஒரு விளம்பரத்தில் நடிக்க மாட்டேன் என பதிலளித்துள்ளார். இந்த பதிவு 7 வருடங்களுக்குப்பின் மீண்டும் டுவிட்டரில் டிரெண்ட் ஆகி வருகிறது.