Categories
சினிமா தமிழ் சினிமா

“ஆகஸ்ட் 22” என்ன நண்பா ரெடியா….? வெய்ட்டிங்கில் விஜய் ரசிகர்கள்….!!

விஜய் 65 திரைப்படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு ஆகஸ்ட் 22ஆம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக கடந்த மார்ச் மாதம் முதல் தற்போது வரை ஊரடங்கு  தொடர்ந்து அமலில் இருப்பதால், பல துறைகள் முடங்கிக் கிடக்கின்றனர். இந்நிலையில் ஊரடங்கில் ஒரு சில தளர்வுகள் தற்போது ஏற்பட்டதைத் தொடர்ந்து, பல துறைகள் மீண்டும் முன்னேற்றம் காணத் தொடங்கி உள்ளன. அதில், சினிமா துறையும் ஒன்று.

ஊரடங்கு முடிந்தவுடன் பல கட்ட படப்பிடிப்பு பணிகளை விரைவாக நடத்துவதற்காக பல்வேறு படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். அந்த வகையில், மாஸ்டர் படத்தை தொடர்ந்து நடிகர் விஜயின் 65 ஆவது படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. சர்க்கார் படத்தின் கூட்டணியான சன் பிக்சர்ஸ்- ஏ ஆர் முருகதாஸ் கூட்டணியில் இந்த படம் உருவாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஆகஸ்ட் 22ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Categories

Tech |