Categories
சினிமா

விஜய் – அஜித் ரசிகர்களிடையே மோதல்… சர்ச்சையை கிளப்பிய நடிகை…!!!

பிரபல நடிகை டுவிட்டரில் விஜய் மற்றும் அஜீத் ரசிகர்களிடையே மோதலை ஏற்படுத்தி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.

சமூக வலைத்தளத்தில் விஜய் அஜித் ரசிகர்கள் தல தளபதி என்று அடிக்கடி மோதிக் கொள்வது வழக்கம். பின்பு சமாதானமாகி விடுவார்கள். பல படங்களில் பிரபல குணசித்திர நடிகையாக நடித்துள்ள சுரேகா வாணி ரசிகர்களுக்கிடையே மோதலை ஏற்படுத்தி பெரும் சர்ச்சையில் மாட்டிக்கொண்டார். சுரேகா வாணி உத்தமபுத்திரன் தெய்வத்திருமகள் ஜில்லா பிரம்மா எதிர்நீச்சல் மெர்சல் விசுவாசம் மாஸ்டர் போன்ற படங்களில நடித்துள்ளார்.இந்நிலையில் தன் ட்விட்டர் பக்கத்தில் விஜயின் சிறந்த ஆக்க்ஷன் படங்களை கூறுங்கள் என்றார். இதுவே ரசிகர்களுக்கு இடையில் பெரும் மோதலை ஏற்படுத்தியது.

மேலும் அஜித் ரசிகர்கள் விஜயின் சில படங்களை கூறினார்கள். பின்பு விஜய்  ரசிகர்கள் அஜித் நடித்த சில படங்களை கூறினார்கள். இதனால் அவர்களுக்கு இடையே சமூகவலைதளத்தில் பெருமளவில் மோதல் ஏற்பட்டது. மற்ற ரசிகர்கள் இப்பிரச்சினை காரணமான சுரேகா வாணியை தேவை இல்லாமல் இவ்வாறு கேட்டு ரசிகர்களுக்கு இடையே சர்ச்சையை ஏற்படுத்திவிட்டீர்கள் நீங்கள் என்ன வேற்று கிரகவாசியா? என்றும் ரசிகர்கள் சுரேகா வாணி கடுமையாக பேசினர்.

Categories

Tech |