Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபாஸுக்கு வில்லனாகும் விஜய்,அஜித் பட நடிகர்…. வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு…!!!

பிரபாஸின் சலார் திரைப்படத்தில் யார் வில்லனாக நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

கேஜிஎஃப் படத்தை இயக்கியதன் மூலம் தேசிய அளவில் பிரபலமானவர் இயக்குனர் பிரசாந்த் நீல். இவர் கேஜிஎஃப் படத்தின் இரண்டாம் பாகத்தையும் இயக்கி முடித்துள்ளார். இப்படம் அடுத்த வருடம் ஏப்ரல் 14-ஆம் தேதி வெளியாகும் என்று அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது. இப்படத்தினை தொடர்ந்து இயக்குனர் பிரசாந்த் நீல் பாகுபலி பிரபாஸை வைத்து சலார் எனும் திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

இப்படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக பிரபல முன்னணி நடிகை ஸ்ருதிஹாசன் நடிக்கிறார். இந்நிலையில் இப்படத்தில் யார் வில்லனாக நடிக்க இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி பிரபல நடிகர் ஜெகபதி பாபு சலார் படத்தில் வில்லனாக நடிக்கிறார் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இவர் ஏற்கனவே விஜய்யுடன் பைரவா திரைப் படத்திலும், அஜித்துடன் விஸ்வாசம்  திரைப்படத்திலும் நடித்திருந்தது  குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |