விஜய் ஆண்டனியின் அடுத்த படத்தில் புது நடிகை காவியா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தின் சிறந்த நடிகர்களுள் ஒருவரான விஜய் ஆண்டனி நடித்த ‘கொலைகாரன்’ திரைப்படம் இந்த ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அவர் தற்போது ‘அக்னி சிறகுகள்’, ‘தமிழரசன்’ மற்றும் ‘காக்கி’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். மேலும் இயக்குனர் ஆனந்த் கிருஷ்ணன் இயக்கத்திலும் இவர் நடிக்க உள்ளர். இந்த படத்திற்கான டைட்டில் வைக்கப்படாத நிலையில், விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக புது நடிகை காவியா நடிக்க உள்ளதாக இயக்குனர் தெரிவித்துள்ளார்.
இவர் ஏற்கனவே மார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ் என்ற படத்தில் நடித்தவர் என்றும் இயக்குனர் கூறியுள்ளார். மேலும் இந்த படம் ஒரு அரசியல் கலந்த ஆக்சன் படம் என்றும் இதுவரை யாரும் கூறாத வித்தியாசமான திரைக்கதை என்றும் இயக்குனர் ஆனந்த் கிருஷ்ணன் கூறியுள்ளார். இதனால் விஜய் ஆண்டனி ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர் . இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் நடைபெறும் எனவும் இயக்குனர் தெரிவித்துள்ளார் .