நடிகர் விஜய் ஆண்டனியின் கோடியில் ஒருவன் படத்தின் டீசர் வருகிற ஜனவரி 2ஆம் தேதி வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராகவும் நடிகராகவும் வலம் வருபவர் விஜய் ஆண்டனி . இவர் நடிப்பில் வெளியான நான் ,பிச்சைக்காரன் ,சலீம் ஆகிய திரைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால் இதையடுத்து இவர் நடிப்பில் வெளியான எமன் ,காளி ,அண்ணாதுரை, திமிருபிடிச்சவன் போன்ற திரைப்படங்கள் எதிர்பார்த்த அளவில் வரவேற்பை பெறவில்லை .
தற்போது நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் தயாராகியுள்ள திரைப்படம் ‘கோடியில் ஒருவன்’. சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது . இந்நிலையில் இந்த படத்தின் டீசர் வருகிற ஜனவரி இரண்டாம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது .