நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள ‘கோடியில் ஒருவன்’ படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகமாகி தற்போது நடிகராக கலக்கிக் கொண்டிருப்பவர் விஜய் ஆண்டனி . இவர் நடிப்பில் இயக்குனர் ஆனந்த கிருஷ்ணன் இயக்கத்தில் ‘கோடியில் ஒருவன்’ திரைப்படம் தயாராகியுள்ளது . இந்த படத்தில் ஆத்மீகா கதாநாயகியாக நடித்துள்ளார் . நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ள இந்த படத்திற்கு உதயகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார் .
Hi : ) It's officiall!!! #KodiyilOruvan releasing this APRIL, 2021. See you soon in theatres. 🙏🏻😊
ICYMI- https://t.co/Ol9IMrekBB
Director @akananda@im_aathmika @nsuthay @nivaskprasanna @chendurfilm @FvInfiniti @saregamasouth @RIAZtheboss @CtcMediaboy pic.twitter.com/Jv0YxHGa6C
— vijayantony (@vijayantony) February 5, 2021
அதிரடி ஆக்ஷன் காட்சிகள் நிறைந்துள்ள இந்த படத்தில் ‘கேஜிஎஃப்’ பட வில்லன் ராமச்சந்திர ராஜு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் . இந்த படத்தின் டீஸர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் ‘கோடியில் ஒருவன்’ படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது . அதில் வருகிற ஏப்ரல் மாதம் திரையரங்குகளில் இந்த படம் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது .