விஜய் ஆண்டனியின் ‘கோடியில் ஒருவன்’ படக்குழு 25 வது வெற்றி நாளை கொண்டாடியது.
நடிகர் விஜய் ஆண்டனி தமிழ் சினிமாவில் வளர்ந்துவரும் முன்னணி நடிகராக இருக்கிறார். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. விஜய் ஆண்டனி நடிப்பில் அறிமுக இயக்குனரான ஆனந்தகிருஷ்ணன் இயக்கிய ”கோடியில் ஒருவன்” திரைப்படம் சமீபத்தில் தியேட்டரில் வெளியானது.
இந்த படத்தில் கதாநாயகியாக ஆத்மிகா மற்றும் வில்லனாக ‘கேஜிஎப்’ வில்லன் ராமச்சந்திர ராஜூ நடித்துள்ளார். இந்நிலையில், இந்த படத்தின் 25 வது நாள் வெற்றி கொண்டாட்டத்தை நடிகர் விஜய் ஆண்டனி மற்றும் படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.