Categories
சினிமா தமிழ் சினிமா

பீஸ்ட் படம் எப்படி இருக்கு….? முக்கிய நபர் அளித்த பதில்…. மிகுந்த எதிர்பார்ப்பில் ரசிகர்கள்….!!!

பீஸ்ட் திரைப்படத்தை பார்த்த சென்சார் குழு உறுப்பினர் விமர்சனத்தை தெரிவித்துள்ளார்.

நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள திரைப்படம் ‘பீஸ்ட்’. இந்த படம் வருகின்ற 13 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. பீஸ்ட் படத்தின் 3 பாடல்கள், டீசர் மற்றும் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதற்கிடையில் பீஸ்ட் படத்தின் ட்ரைலரை விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி பொதுவான ரசிகர்கள் அனைவரும் ரசித்தனர். இருப்பினும் சிலர் கடுமையாக விமர்சித்ததோடு படத்தின் கதை யோகி பாபு நடிப்பில் வெளிவந்த கூர்க்கா படத்தைப் போல் இருப்பதாக கூறினர்.

மேலும் சிலர் பல லாஜிக் மீறல்கள் இருப்பதாகவும் கூறினார்கள். இவர்களை தொடர்ந்து சிலர்  ட்ரெய்லரில் படத்தின் மொத்த கதையும் நெல்சன் கூறிவிட்டதாக தெரிவித்தனர். இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க மற்றொரு பக்கம் நெல்சன் மீது விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி பொதுவான ரசிகர்கள் பலரும் அபார நம்பிக்கை வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பீஸ்ட் படத்தின் விமர்சனத்தை இங்கிலாந்து மற்றும் துபாய் நாட்டின் சென்சார் உறுப்பினர் ஒருவர் வெளியிட்டுள்ளார். அவர் கூறியதாவது, “விஜயின் பீஸ்ட் திரைப்படம் திரில்லர் மட்டும் அனைத்து அம்சங்களுடன் சிறப்பான படமாக அமைந்துள்ளது. மேலும் விஜய் அபாரமாக நடித்து உள்ளார். இதனை தொடர்ந்து திரைப்படம் அசத்தலான திரைக்கதையில் ஆக்ஷன் திரில்லராக வந்திருப்பதால் ரசிகர்கள் அனைவரும் இது கவரும்” என்று கூறி பீஸ்ட் படத்திற்கு 4 ஸ்டார்களை கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |