Categories
சினிமா மாநில செய்திகள்

BREAKING : விஜய் வீட்டில் 23 மணி நேர சோதனை நிறைவு …!!

நடிகர் விஜய் வீட்டில் வருமானவரித்துறையினர் நடத்திய சோதனை நிறைவு பெற்றுள்ளதாக வருமானவரித்துறையினர் தெரிவித்துள்ளனர்.

ஏஜிஎஸ் படம் தயாரிப்பு நிறுவனம் , அதேபோல சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் , பிகில் பட விநியோகஸ்தர்கள் , நடிகர் விஜய் என வீடு அலுவலகங்கள் உட்பட 38 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். கடந்த இரண்டு நாட்களாக இந்த சோதனை நடந்து கொண்டிருக்கிறது. இதில் சினிமா பைனான்சியர் அன்புசெழியனுக்கு சொந்தமான சென்னை , மதுரை ஆகிய இடங்களில் நடந்த சோதனையில் பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டாக வருமான வரித்துறையினர் தெரிவித்தனர்.

இது குறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் கூறுகையில் , கணக்கில் காட்டாத 300 கோடி ரூபாய் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் , 77 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவித்தனர். நெய்வேலியில் மாஸ்டர் படப்பிடிப்பில் இருந்த விஜயை அழைத்து வந்த வருமான வரித்துறையினர் 23 மணி நேரமாக நடிகர் விஜய் வீட்டில் சோதனை செய்தனர்.

சாலிகிராமம் , நீலாங்கரை ஆகிய இடங்களில் உள்ள விஜய் வீட்டில் நேற்று முதல் தற்போது வரை நடந்த சோதனை நிறைவு பெற்றதாக வருமானவரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதில் நடிகர் விஜய் சம்பளம் குறித்து விசாரித்ததாகவும் , அவரிடமும் , அவரின் மனைவியிடம் வாக்குமூலம் பெற்றதாகவும் வருமானவரித்துறையினர் தெரிவித்தனர். இந்த சோதனையில் ஒரு ரூபாய் கூட கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்க : 2 நாள் ….. 2 வீடு ….. ரூ 1 கூட இல்ல…. IT சோதனை எதற்காக ? பகீர் தகவல் …!!

Categories

Tech |