Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய் ரசிகர்களே…! தீபாவளி விருந்தாக காத்திருக்கும் இரட்டிப்பு சந்தோஷம்… ரெடியாக இருங்கள்…!!!!!!

தீபாவளியன்று விஜய் ரசிகர்களுக்கு காத்திருக்கும் இரட்டிப்பு சந்தோஷம்.

வம்சி இயக்கத்தில் விஜய் நடிக்கும் தளபதி 66 படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் அண்மையில் வெளியானது. இந்த படத்திற்கு ‘வாரிசு’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.  சரத்குமார், பிரகாஷ்ராஜ், ஷியாம் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு தமன் இசையமைக்கிறார்.  இந்த படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேசன்ஸ் தயாரிக்கின்றது. தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி வரும் இந்த படம் 2023 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாக உள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

தளபதி திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகவில்லையே என ரசிகர்கள் கவலைப்பட்டு வந்த நிலையில் தீபாவளிக்கு ரசிகர்களுக்கு பரிசு தர வேண்டும் என விஜய் முடிவு எடுத்தார். அதன்படி வாரிசு திரைப்படத்தின் முதல் சிங்கிள் ட்ராக் பாடல் தீபாவளி அன்று வெளியாக உள்ளது. மேலும் விஜய்யின் 67வது திரைப்படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடப்பட உள்ளது. இதனால் தீபாவளி அன்று விஜய் ரசிகர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் என கூறப்படுகின்றது.

Categories

Tech |