விஜய்யின் ‘மாஸ்டர்’ திரைப்படம் 2021 ஆம் ஆண்டு அதிக வசூல் செய்த திரைப்படம் என்று திருப்பூர் சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. இந்த படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வில்லனாக நடித்திருந்தார். மேலும் மாளவிகா மோகனன், நாசர், சாந்தனு, ஆண்ட்ரியா உள்ளிட்ட பல பிரபலங்களும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தனர்.
கடந்த வருடம் பொங்கலுக்கு வெளியான இத்திரைப்படம் கொரோனா காலகட்டத்திற்கு பிறகும் அதிக வசூல் சாதனை படைத்த படமாக திகழ்ந்தது. சமீபத்தில் ட்விட்டர் நிர்வாகம் ட்விட்டர் பக்கத்தில் அதிக ஹேஷ்டேக்களை பயன்படுத்தப்பட்ட திரைப்படமாக மாஸ்டர் படத்தை அறிவித்திருந்தது.
இந்நிலையில் திரையரங்க உரிமையாளர்கள் கூட்டமைப்பின் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் 2021 ஆம் ஆண்டு அதிக வசூல் செய்த திரைப்படம் மாஸ்டர் என தெரிவித்துள்ளார். இதனை அறிந்த விஜய் ரசிகர்கள் தங்களது மகிழ்ச்சியை சமூக வலை தளங்களின் வாயிலாக பகிர்ந்து வருகின்றனர்.