Categories
சினிமா தமிழ் சினிமா

தங்க நாணயங்களை வழங்கி வரும் விஜய் ரசிகர்கள்…. குவியும் பாராட்டுக்கள்….!!!

விஜய் ரசிகர்களின் நற்செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

தமிழகம் முழுவதும் பரவியுள்ள கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் உணவின்றி இருக்கும் ஏழை மக்களுக்கு பல திரைப்பிரபலங்கள் உணவு அளித்து வருகின்றனர்.

அந்த வகையில் தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஜயின் தளபதி விஜய் மக்கள் இயக்கத்தினர் உயிர் காக்கும் பணியில் ஈடுபட்டுவரும் மருத்துவர்கள், செவிலியர்கள், ஆம்புலன்ஸ் டிரைவர்கள், மற்றும் சிடி ஸ்கேன் லேப் டெக்னீசியன்கள் ஆகியோரை பாராட்டும் விதமாக அவர்களுக்கு தங்க நாணயங்களை வழங்கி வருகின்றனர்.

இது குறித்த புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. புதுக்கோட்டை விஜய் ரசிகர்களின் இந்த செயலுக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் இருக்கிறது.

விஜய் ரசிகர்கள்

Categories

Tech |