Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய் படத்தில் நடித்ததற்கு வருந்துகிறேன் – அக்ஷரா கௌடா…!!

நடிகை அக்ஷரா தனக்கு துப்பாக்கி படத்தில் கிடைத்த கதாபாத்திரத்திற்கு தான் வருந்துவதாக கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவில் உயர்திரு 420 படம் மூலம் அறிமுகமானவர் நடிகை அக்ஷரா கௌடா. அதன் பின் விஜய்யுடன் துப்பாக்கி மற்றும் அஜித்துடன் ஆரம்பம் ஆகிய படங்களில் சிறிய வேடத்தில் நடித்துள்ளார். இதை தொடர்ந்து இரும்புக்குதிரை, போகன், சங்கிலி புங்கிலி கதவ திற, மாயவன் போன்ற படங்களிலும் நடித்துள்ளார். அக்ஷரா சமீபத்தில் ஒரு பேட்டியில், துப்பாக்கி படத்தில் நடித்ததற்கு அவர் வருத்தப்படுவதாகக் கூறியிருந்தார்.

இது பற்றி அவர் கூறுகையில், ” துப்பாக்கி படத்தில் எனக்கு நேர்ந்த ஒரே நல்ல விஷயம் என்னவென்றால் விஜய், முருகதாஸ், சந்தோஷ் சிவன் இவர்களின் அறிமுகம் கிடைத்தது தான். அந்த படத்தில் நான் என்ன கதாபாத்திரத்தில் நடித்தேன்? அந்த கதாபாத்திரத்திற்காக நான் வருத்தப்படுகிறேன். ஏனென்றால் அவர்கள் என்னை காஜல் அகர்வாலின் தோழி கதாபாத்திரம் என்று தான் அழைத்தனர். ஆனால் படத்தில் அப்படிஎதுவும்  இல்லை. இருந்தும் எனக்கு அது பற்றி எந்தவித கோபமும் இல்லை. அவர்கள் இப்போது என்னை அழைத்தாலும் நான் நடிப்பதற்கு தயார், என்று அக்ஷரா கூறியுள்ளார்.

Categories

Tech |