Categories
கிரிக்கெட் விளையாட்டு

விஜய் ஹசாரே கோப்பை : பரோடா அணி அதிரடி ஆட்டம் ….! தமிழக அணி படுதோல்வி ….!!!

விஜய் ஹசாரே கோப்பை தொடரில் பரோடா அணிக்கெதிரான ஆட்டத்தில் தமிழக அணி படுதோல்வி அடைந்தது .

விஜய் ஹசாரே கோப்பை தொடரில் இன்று நடந்த 5-வது சுற்று ஆட்டத்தில் தமிழ்நாடு – பரோடா அணிகள் மோதின.இதில் டாஸ் வென்ற பரோடா அணி பேட்டிங் தேர்வு செய்தது .அதன்படி முதலில் களமிறங்கிய பரோடா அணி தமிழக அணியின் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து விக்கெட் இழந்து திணறியது இதனால் பரோடா அணி 39 ஓவரில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 114 ரன்னில் சுருண்டது. இதில் அதிகபட்சமாக  குர்னால் பாண்டியா 38 ரன்கள் குவித்தார். இதன் பிறகு 115 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் தமிழக அணி களமிறங்கியது.

இதில் தொடக்க வீரராக களமிறங்கிய சந்தீப் வாரியர்  முதல் பந்திலேயே ஆட்டமிழந்து வெளியேறினார் . இதன் பிறகு களமிறங்கிய ஹரி நிஷாந்த் , ஜெகதீசன் வாஷிங்டன் சுந்தர், தினேஷ் கார்த்திக் ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர் .இதன்பிறகு சஞ்சய் யாதவ்- ஷாருக்கான் ஜோடி அதிரடியாக விளையாடி அணியை தோல்வியில் இருந்து மீட்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இருவரும் ஒருசில பவுண்டரிகளை அடித்ததோடு வெளியேறினர். இதனால் தமிழக அணி 20.2 ஓவரில் அனைத்து விக்கெட் இழப்புக்கு  73 ரன்னில் சுருண்டது. இதில் பரோடா அணி சார்பில் பார்கவ் பாட் 3 விக்கெட் வீழ்த்தினார். இதனால் பரோடா அணி 41 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

Categories

Tech |