விஜய் ஹசாரே கோப்பைக்கான ஒருநாள் போட்டியில் பெங்கால் அணிக்கு எதிரான ஆட்டத்தில் தமிழக அணி 136 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
விஜய் ஹசாரே கோப்பைக்கான ஒருநாள் தொடரில் நேற்று நடந்த 3-வது லீக் ஆட்டத்தில் தமிழ்நாடு – பெங்கால் அணிகள் மோதின .இதில் டாஸ் வென்ற பெங்கால் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய தமிழக அணி 50 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 295 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்சமாக தினேஷ் கார்த்திக் 87 ரன்னும் , பாபா இந்திரஜித் 64 ரன்னும் குவித்தனர் .பெங்கால் அணி சார்பில் முகேஷ் குமார் மற்றும் அங்கித் ஆகியோர் தலா 3 விக்கெட் வீழ்த்தினர் .
இதன்பிறகு 296 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்கால் அணி களமிறங்கியது. ஆனால் தமிழக அணியின் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறியது .இதனால் பெங்கால் அணி 39.1 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 149 ரன்னில் சுருண்டது. இதில் தமிழக அணி தரப்பில் சிலம்பரசன் 4 விக்கெட் கைப்பற்றி அசத்தினார். இதன்மூலம் தமிழக அணி 136 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.