Categories
கிரிக்கெட் விளையாட்டு

விஜய் ஹசாரே கோப்பை : சாம்பியன் பட்டம் வென்ற இமாசலபிரதேச அணிக்கு …. ரவிசாஸ்திரி பாராட்டு ….!!!

விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் தொடரில் நேற்று நடந்த இறுதிப் போட்டியில் வெற்றி பெற்ற இமாச்சல பிரதேச அணிக்கு ரவி சாஸ்திரி பாராட்டு தெரிவித்துள்ளார் .

விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் தொடர் ஜெய்ப்பூரில் நடைபெற்று வந்தது .இந்நிலையில் நேற்று நடந்த இறுதிப் போட்டியில் தமிழ்நாடு – இமாச்சலப்பிரதேசம் அணிகள் மோதின. இதில் தமிழக அணியை வீழ்த்தி வெற்றி பெற்ற இமாச்சலப்பிரதேச அணி முதல்முறையாக கோப்பையை வென்றது .இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளரான ரவி சாஸ்திரி நேற்று அளித்த பேட்டியில் கூறும்போது,”இமாச்சல  பிரதேசம் போன்ற அணியில் நட்சத்திர வீரர்கள் கிடையாது.

ஆனாலும் நடந்த விஜய் ஹசாரே கோப்பை தொடரில் இமாச்சல பிரதேச அணி வெற்றி பெற்றுள்ளது .இதன்மூலம் கட்டுக்கோப்புடன் கடினமாக உழைத்து போட்டியில் ஒரு அணியாக முழு உத்வேகத்துடன் செயல்பட்டால் சாதிக்க முடியும் என்பதை அவர்கள் நிரூபித்துக் காட்டியுள்ளனர் .அவர்களுக்கு பாராட்டுக்கள் “இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |