Categories
கிரிக்கெட் விளையாட்டு

விஜய் ஹசாரே கோப்பை FINAL : கோப்பையை வெல்லப்போவது யார்….? தமிழகம் VS இமாசலபிரதேசம் இன்று மோதல் ….!!!

விஜய் ஹசாரே கோப்பை தொடரில் இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் தமிழ்நாடு – இமாச்சல பிரதேசம் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் தொடர் ஜெய்ப்பூரில் நடைபெற்று வருகிறது. இதில் நடந்து  முடிந்த அரையிறுதி ஆட்டத்தில் தமிழ்நாடு,இமாச்சலப்பிரதேசம் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றன .இந்நிலையில் இன்று காலை 9 மணிக்கு நடைபெறும் இறுதிப்போட்டியில் தமிழ்நாடு – இமாச்சல பிரதேசம் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன . இதில் தமிழக அணி 5 முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.

குறிப்பாக அணியில் தினேஷ் கார்த்திக் ,ஷாருக்கான், வாஷிங்டன் சுந்தர் ,ஜெகதீசன் மற்றும் சாய் கிஷோர் என அணியின் நட்சத்திர வீரர்கள் அணிவகுத்து நிற்கின்றனர் .அதேசமயம் முதல்முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ள இமாச்சல பிரதேசம் அணியில்  பிரசாந்த் சோப்ரா, கேப்டன் ரிஷி தவான் ஆகியோர் நம்பிக்கை அளிக்கின்றனர். இதனால் இன்று இறுதிப்போட்டியில் வெற்றி பெறுவது யார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Categories

Tech |