விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் தொடரில் கர்நாடகா அணிக்கெதிரான காலிறுதி ஆட்டத்தில் 151 ரன்கள் வித்தியாசத்தில் தமிழக அணி அபார வெற்றி பெற்றது .
விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் தொடரில் இன்று நடந்த காலிறுதி ஆட்டத்தில் தமிழ்நாடு- கர்நாடகா அணிகள் மோதின. இதில் முதலில் களமிறங்கிய தமிழக அணி 50 ஓவர் முடிவில் 354 ரன்கள் எடுத்தது .இதில் அதிகபட்சமாக ஜெகதீசன் 102 ரன்னும் , ஷாருக்கான் 79 ரன்னும் ,சாய் கிஷோர் 61 ரன்னும் குவித்தனர் .இதன்பிறகு 355 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கர்நாடக அணி களமிறங்கியது .
ஆனால் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து திணறியது .இதனால் கர்நாடக அணி 39 ஓவரில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 203 ரன்னில் சுருண்டது .இதில் அதிகபட்சமாக ஸ்ரீநிவாஸ் சர்த் 43 ரன்கள் குவித்தார். தமிழக அணி தரப்பில் சிலம்பரசன் 4 விக்கெட்டும், வாஷிங்டன் சுந்தர் 3 விக்கெட்டும் வீழ்த்தினர் .இதனால் 151 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தமிழக அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.