விஜய் ஹசாரே கோப்பை தொடரில் சண்டிகர் அணிக்கெதிரான ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் மகாராஷ்டிரா அணி அபார வெற்றி பெற்றது .
விஜய் ஹசாரே கோப்பை தொடரில் இன்று நடந்த 5-வது சுற்று ஆட்டத்தில் மகாராஷ்டிரா – சண்டிகர் அணிகள் மோதின .இதில் டாஸ் வென்ற மகாராஷ்டிரா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய சண்டிகர் அணி 50 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 309 ரன்கள் குவித்தது. இதில் அதிகபட்சமாக கேப்டன் மனன் வோரா 141 ரன்னும், அர்ஸ்லன் கான் 87 ரன்னும் , அங்கித் கௌஷிக் 56 ரன்னும் குவித்தனர் .
இதன்பிறகு 310 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மகாராஷ்டிரா அணி களமிறங்கியது. இதில் தொடக்க வீரராக களமிறங்கிய ருதுராஜ் கெய்க்வாட் வழக்கம்போல் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். தொடர்ந்து அதிரடி காட்டிய ருதுராஜ் 168 ரன்கள் குவித்தார் .இதன் மூலம் இத்தொடரில் அவர் 4-வது சதத்தை பதிவு செய்துள்ளார் .இறுதியாக மகாராஷ்டிரா அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது .இதில் அதிகபட்சமாக அஸிம் காஸி 73 ரன்னும் , ருதுராஜ் கெய்க்வாட் 168 ரன்னும் குவித்தனர் .