விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பரோடா அணிக்கெதிரான ஆட்டத்தில் மும்பை அணி வெற்றி பெற்றது.
20 -வது விஜய் ஹசாரே கோப்பைக்கான ஒருநாள் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன .இப்போட்டி மும்பை, கவுகாத்தி , திருவனந்தபுரம் , ஜெய்பூர் உட்பட 7 நகரங்களில் நடைபெற்று வருகிறது .இதில் கலந்து கொண்ட 35 அணிகள் 6 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக் சுற்றில் மோதி வருகின்றன .இதில் ‘எலைட் பி’ பிரிவில் நடந்த ஆட்டத்தில் மும்பை – பரோடா அணிகள் மோதின .இதில் டாஸ் வென்ற அணி பேட்டிங் தேர்வு செய்தது .
அதன்படி முதலில் களமிறங்கிய பரோடா அணி 49.1 ஓவரில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 210 ரன்கள் எடுத்தது .இதன் பிறகு விளையாடிய மும்பை அணி 23 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 100 ரன் எடுத்திருந்த நிலையில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் பாதிக்கப்பட்டது .இதனால் மழை பாதிப்பைத் தொடர்ந்து உள்ளூர் தொடரில் பயன்படுத்தப்படும் வி.ஜெ.டி. விதிமுறைப்படி மும்பை அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் மும்பை அணி முதல் வெற்றியை தனதாக்கியது.