விஜய் ஹசாரே ஒருநாள் கோப்பை தொடரில் நேற்றைய போட்டியில் ராஜஸ்தான் அணியை வீழ்த்தி கர்நாடகா காலிறுதிக்கு முன்னேறியது.
விஜய் ஹசாரே ஒருநாள் கோப்பை தொடருக்கான இறுதிக்கட்ட ஆட்டங்கள் ஜெய்ப்பூரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது .இதில் நேற்று நடைபெற்ற காலிறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டத்தில் கர்நாடகா-ராஜஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 41.4 ஓவர்களில் 199 ரன்களில் சுருண்டது .இதில் அதிகபட்சமாக கேப்டன் தீபக் ஹூடா 109 ரன்கள் குவித்தார் .இதன் பிறகு களமிறங்கிய கர்நாடக அணி 43.4 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 204 ரன்கள் குவித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இதில் அதிகபட்சமாக கேப்டன் ரவிகுமார் சமார்த் 54 ரன்னும் , கே.வி.சித்தார்த் 85 ரன்னும் ,மனிஷ் பாண்டே 52 ரன்களும் குவித்தனர். இந்த வெற்றியின் மூலம் கர்நாடக அணி காலிறுதிக்கு முன்னேறியுள்ளது .இதை அடுத்து நாளை நடைபெறும் காலிறுதி ஆட்டங்களில் தமிழ்நாடு-கர்நாடகா அணியும் ,உத்தரபிரதேசம்-இமாச்சலபிரதேசம் அணியும் மோதுகின்றன .இதையடுத்து நாளை மறுதினம் நடைபெறும் ஆட்டத்தில் சவுராஷ்டிரா-விதர்பா, கேரளா-சர்வீசஸ் அணிகள் மோதுகின்றன.