விஜய் ஹசாரே கோப்பை தொடரில் இன்று நடந்த சர்வீசஸ் அணிக்கெதிரான அரையிறுதி ஆட்டத்தில் ஹிமாச்சல பிரதேச அணி வெற்றி பெற்றது .
விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் தொடரில் இன்று நடந்த அரையிறுதி ஆட்டத்தில் ஹிமாச்சல பிரதேசம் – சர்வீசஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற சர்வீசஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது .அதன்படி முதலில் களமிறங்கிய ஹிமாச்சல பிரதேச அணி 50 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 281 ரன்கள் குவித்தது . இதில் அதிகபட்சமாக ரிஷி தவான் 84 ரன்னும், பிரசாந்த் சோப்ரா 78 ரன்னும் குவித்தனர் .சர்வீசஸ் அணி தரப்பில் ராஜ் பகதூர் 2 விக்கெட் கைப்பற்றினார் .
இதன்பிறகு 282 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சர்வீசஸ் அணி களமிறங்கியது. இதில் அதிகபட்சமாக கேப்டன் ராஜத் பலிவால் 55 ரன்கள் குவித்தார் .மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர் .இதனால் சர்வீசஸ் அணி 46.1 ஓவரில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 204 ரன்னில் சுருண்டது .இதில் ஹிமாச்சல அணி தரப்பில் கேப்டன் ரிஷி தவான் 4 விக்கெட் கைப்பற்றி அசத்தினார். இதனால் 77 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஹிமாச்சல பிரதேச அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.