விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் தொடரில் இன்று நடந்த இறுதிப்போட்டியில் 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஹிமாச்சல பிரதேச அணி முதல் முறையாக கோப்பையைக் கைப்பற்றியது.
விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் தொடரில் இன்று நடந்த இறுதிப் போட்டியில் தமிழ்நாடு- ஹிமாச்சல பிரதேசம் அணிகள் மோதின.இதில் டாஸ் வென்ற ஹிமாச்சல பிரதேச அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய தமிழக அணி அனைத்து விக்கெட் இழப்புக்கு 314 ரன்கள் குவித்தது . இதில் அதிகபட்சமாக தினேஷ் கார்த்திக் 116 ரன்னும், இந்திரஜித் 88 ரன்னும் குவித்தனர் .ஹிமாச்சல அணி தரப்பில் பங்கஜ் ஜெய்ஸ்வால் 4 விக்கெட் கைப்பற்றினார்.
அதன்பிறகு 315 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஹிமாச்சல் அணி களமிறங்கியது. தொடக்க வீரராக களமிறங்கிய சுபம் அரோரா அதிரடியான தொடக்கத்தை கொடுத்தார் இவர் 131 பந்துகளில் 13 பவுண்டரி , ஒரு சிக்சர் என 136 ரன்கள் குவித்தார் .இந்நிலையில் ஹிமாசல பிரதேச அணி 299 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மோசமான வானிலை காரணமாக போட்டி தடைபட்டது இதனால் 11 ரன்கள் வித்தியாசத்தில் ஹிமாச்சல பிரதேசஅணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்த வெற்றியின் மூலம் ஹிமாச்சல பிரதேசம் அணி முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளது.