விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் தொடரில் இன்று நடந்த காலிறுதி ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் சவுராஷ்டிரா அணி அபார வெற்றி பெற்றது.
விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் போட்டி ராஜஸ்தானில் ஜெய்ப்பூர் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடந்த காலிறுதி ஆட்டத்தில் சவுராஷ்டிரா-விதர்பா அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த விதர்பா அணி அனைத்து விக்கெட் இழப்புக்கு 150 ரன்னில் சுருண்டது. இதில் அதிகபட்சமாக அபூர்வா வான்கடே 72 ரன்கள் குவித்தார் . சவுராஷ்டிரா அணி சார்பில் யுவராஜ் சுடஸ்மா மற்றும் ஜெய்தேவ் உனட்கட் ஆகியோர் தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.
இதன் பிறகு களமிறங்கிய சவுராஷ்டிரா அணி 20.1 ஓவர்கள் மீதம் இருந்த நிலையில் இலக்கை எட்டி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதில் அதிகபட்சமாக பிரேராக் மாண்கட் 77 ரன்னும் , அர்பிட் வசவடா 41 ரன்னும் குவித்தனர் .விதர்பா அணி சார்பில் ஆதித்யா தாக்கரே 2 விக்கெட் கைப்பற்றினார். இதன் மூலம் வெற்றி பெற்ற சவுராஷ்டிரா அணி அரைஇறுதிக்கு முன்னேறி உள்ளது .இதற்கு முன்னதாக இமாச்சலப் பிரதேசம் மற்றும் தமிழ்நாடு அணிகள் அரையிறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன.