விஜய் ஹசாரே கோப்பைக்கான ஒரு நாள் போட்டியில் இன்று நடந்த தமிழ்நாடு- கர்நாடகா அணிகளுக்கு இடையேயான ஆட்டத்தில் தமிழக அணி வெற்றி பெற்றுள்ளது .
20-வது விஜய் ஹசாரே கோப்பைக்கான ஒரு நாள் போட்டி நடைபெற்று வருகிறது. இப்போட்டி மும்பை ,திருவனந்தபுரம் ,கவுகாத்தி , ஜெய்பூர் உட்பட 7 நகரங்களில் நடைபெற்று வருகிறது .இதில் கலந்து கொண்டுள்ள 38 அணிகள் 6 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக் சுற்றில் மோதி வருகின்றன. இதில் லீக் சுற்று முடிவில் எலைட் ஏ, பி, சி, டி, இ ஆகிய பிரிவுகளில் முதல் 5 இடங்களை பிடிக்கும் அணிகள் நேரடியாக காலிறுதி சுற்றுக்கு முன்னேறும் .
இதில் இன்று நடந்த லீக் ஆட்டத்தில் தமிழ்நாடு- கர்நாடகா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற கர்நாடக அணி பேட்டிங் தேர்ந்தெடுத்தது .அதன்படி முதலில் பேட் செய்த கர்நாடக அணி தமிழக அணியின் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறியது இதனால் 36.3 ஓவரில் 122 ரன்னில் ஆட்டமிழந்தது. இதில் தமிழக அணி தரப்பில் சித்தார்த் 4 விக்கெட், ,சாய் கிஷோர் 3 விக்கெட் கைப்பற்றினர் .இதன் பிறகு 123 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தமிழக அணி களமிறங்கியது. இறுதியாக தமிழக அணி 28 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 123 ரன்கள் குவித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.