Categories
கிரிக்கெட் விளையாட்டு

விஜய் ஹசாரே கோப்பை :ருதுராஜ் கெய்க்வாட் அதிரடி சதம் ….! மகாராஷ்டிரா அசத்தல் வெற்றி…!!!

விஜய் ஹசாரே கோப்பைக்கான ஒருநாள் தொடரில் நேற்று நடந்த ஆட்டத்தில் 8 விக்கெட் மகாராஷ்டிரா அணி வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

விஜய் ஹசாரே கோப்பைக்கான ஒருநாள் தொடரில் நேற்று நடந்த 2-வது சுற்று ஆட்டத்தில் எலைட் ‘குரூப் டி’ பிரிவில் உள்ள மகாராஷ்டிரா- சத்தீஸ்கர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற மகாராஷ்டிரா அணி பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய சத்தீஸ்கர் அணி தொடக்கத்திலிருந்தே விக்கெட் இழந்து திணறியது. இதில் அதிகபட்சமாக  ஜோடி அமந்தீப் கரே – ஷஷாங் சிங் அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்து அசத்தினர். இறுதியாக  சத்தீஸ்கர் அணி 50 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 275 ரன்கள் எடுத்தது. மகாராஷ்டிரா அணி சார்பில் முகேஷ் சௌத்ரி 4 விக்கெட் வீழ்த்தினார்.

இதன் பிறகு மகாராஷ்டிரா அணி  களமிறங்கியது .இதில் தொடக்க வீரர்களான கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் – யாஷ் நாகர்  ஜோடி அதிரடியாக விளையாடி சிறந்த தொடக்கத்தை கொடுத்தனர். இதில் யாஷ் நாகர் 52 ரன்னில் ஆட்டமிழக்க , மறுமுனையில் அதிரடியாக விளையாடிய ருதுராஜ் கெய்க்வாட் சதம் அடித்து அசத்தினார் .இதன் மூலம் அவர் இந்த சீசனில் அடிக்கும் 2-வது சதம் இதுவாகும் .இதில்  தொடர்ந்து விளையாடிய ருதுராஜ் 154 ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார். இறுதியாக மகாராஷ்டிரா அணி 47 ஓவரில் இலக்கை எட்டி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

Categories

Tech |