Categories
கிரிக்கெட் விளையாட்டு

விஜய் ஹசாரே தொடர் : தமிழக அணி அறிவிப்பு …..! நடராஜனுக்கு இடமில்லை ….!!!

விஜய் ஹசாரே ஒருநாள் தொடருக்கான 20 பேர் கொண்ட தமிழக அணி நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் ஒன்றான விஜய் ஹசாரே ஒரு நாள் தொடர் வருகின்ற டிசம்பர் 8ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது .இப்போட்டிக்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன .இந்நிலையில் இந்த தொடருக்கான தமிழக அணி நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் சமீபத்தில் நடந்து முடிந்த சையது முஷ்டாக் அலி தொடரில் தமிழக அணிக்கு கேப்டனாக செயல்பட்ட விஜயசங்கர் ,விஜய் ஹசாரே தொடரிலும்  கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார் .

இந்நிலையில் கைவிரலில் ஏற்பட்ட காயம் காரணமாக ஐபிஎல், இங்கிலாந்து டெஸ்ட் தொடர் மற்றும் சையது முஷ்டாக் அலி ஆகிய தொடர்களில் இடம் பெறாமல் இருந்த வாஷிங்டன் சுந்தர் விஜய் ஹசாரே தொடரில் இடம் பெற்றுள்ளார். அதேசமயம் சையது முஷ்டாக் அலி போட்டியில் விளையாடாமல் இருந்த தினேஷ் கார்த்திக் இந்த தொடரில் மீண்டும் அணியுடன் இணைந்துள்ளார். இந்நிலையில் இடக்கை வேகப்பந்து வீச்சாளரான நடராஜன் இந்த தொடரிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு அணி: விஜய் சங்கர்(கேப்டன்), என் ஜெகதீசன், தினேஷ் கார்த்திக், ஹரி நிசாந்த், ஷாருக் கான், ஷாய் கிஷோர், முருகன் அஸ்வின், சந்தீப் வாரியர், வாஷிங்டன் சுந்தர், எம் சித்தார்த், சாய் சுதர்ஸன், கங்கா ஸ்ரீதர் ராஜூ, எம். முகமது, ஜே.கவுசிக், பி.சரவணகுமார், எல். சூர்யபிரகாஷ், பாபா இந்திரஜித், ஆர் சஞ்சய் யாதவ், எம் கவுசிக் காந்தி, ஆர் சிலம்பரசன்.

Categories

Tech |