Categories
கிரிக்கெட் விளையாட்டு

விஜய் ஹசாரே கோப்பை: தினேஷ் கார்த்திக் தமிழக அணி கேப்டனாக தேர்வு

விஜய் ஹசாரே கோப்பைக்கான தமிழக அணியின் கேப்டனாக தினேஷ் கார்த்திக் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக திகழ்ந்து வரும் தினேஷ் கார்த்திக், கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பையில் இந்திய அணி சார்பில் பங்கேற்று ஆடினார். இந்நிலையில் வரும் செப்டம்பர் மாதம் 24-ம் தேதி முதல் அக்டோபர் மாதம் 16-ம் தேதி வரை ஜெய்பூரில் விஜய் ஹஸாரே கோப்பைக்கான ஒருநாள் போட்டி நடைபெறவிருக்கிறது.

Image result for தினேஷ் கார்த்திக்

இந்நிலையில், தேர்வுக் குழுத் தலைவர் செந்தில்நாதன் கூறுகையில், அனுபவம் மற்றும் சக வீரர்களை ஊக்கப்படுத்துவதில் தினேஷ் கார்த்திக்கின் செயல்பாடு சிறப்பாக உள்ளதை கருத்தில் கொண்டு கேப்டனாக நியமித்துள்ளோம் என்று கூறினார்.

Categories

Tech |