Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய் தான் நம்பர் ஒன் ஹீரோ… ஆதாரங்களை காட்டும் ரசிகாஸ்.. பரபரக்கும் சோசியல் மீடியா..!!!!

சோசியல் மீடியாவில் விஜய் தான் நம்பர் ஒன் என ரசிகர்கள் பேசி வருகின்றார்கள்.

தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வருகின்றார் விஜய். இவர் சினிமாவில் அறிமுகமானபோது பல விமர்சனங்களுக்குள்ளாகி தனது விடாமுயற்சியின் மூலம் தற்போது இந்த இடத்தை பிடித்திருக்கின்றார். நடிகராக அறிமுகமாகி பின் இளைய தளபதியாக என்ட்ரி கொடுத்து தற்போது ரசிகர்களின் மனதில் தளபதியாக நிற்கின்றார்.

இவர் தனது ஒவ்வொரு திரைப்படத்தின் மூலம் புதிய சாதனையை படைத்து வருகின்றார். இவரின் திரைப்படங்கள் விமர்சனத்திற்குள்ளானாலும் பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்து தயாரிப்பாளர்களுக்கு லாபத்தை கொடுத்து விடும். தமிழ் சினிமா உலகில் ரஜினி கமலுக்கு அடுத்தபடியாக விஜய் அஜித்தை தான் ரசிகர்கள் பார்க்கின்றார்கள். இவ்விரு நடிகர்களின் ரசிகர்களுக்கும் இடையே மோதல் ஏற்படுவது இயல்பான ஒன்று. தற்போது பொங்கலுக்கு வாரிசு மற்றும் துணிவு திரைப்படம் வெளியாவதால் அதிகமான மோதல் ஏற்பட்டு வருகின்றது.

இதனிடையே வாரிசு திரைப்பட தயாரிப்பாளர் தில் ராஜு விஜய் தான் நம்பர் ஒன் ஹீரோ என கூறியது அஜித் ரசிகர்களிடையே மேலும் சலசலப்பை ஏற்படுத்தியது. இதனால் தற்பொழுது சோசியல் மீடியாவில் யார் நம்பர் ஒன் நடிகர் என்பது ஹாட் டாபிக்காக இருக்கின்றது. இந்த நிலையில் விஜய் ரசிகர்கள் ஆதாரங்களுடன் விஜய் தான் நம்பர் ஒன் என கூறி வருகின்றார்கள்.

சென்ற 10 வருடங்களில் விஜய் திரைப்படங்கள் செய்த வசூல் சாதனை தளபதி 67 திரைப்படம் அறிவிப்பு வெளியாவதற்கு முன்பாகவே பல கோடி வியாபாரம் செய்தை சுட்டிக்காட்டி வருகின்றார்கள். இது ரசிகர்களிடையே கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் பொதுவான ரசிகர்கள் விஜய் வியாபாரத்திலும் வசூலிலும் தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் என தெரிவித்து வருகின்றார்கள் குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |