Categories
உலக செய்திகள்

விஜய் மல்லையாவுக்கு எதிராக திவால் உத்தரவு ….. இங்கிலாந்து உயர்நீதிமன்றம் அதிரடி ….!!!

பிரபல தொழிலதிபரான விஜய் மல்லையாவுக்கு எதிராக இங்கிலாந்து உயர்நீதிமன்றம்  திவால் உத்தரவு பிறப்பித்துள்ளது .

இந்தியாவின் பிரபல தொழிலதிபரான விஜய் மல்லையா ஸ்டேட் பாங்க் உட்பட பல வங்கிகளில் ரூபாய் 9000 கோடி கடன் மோசடி செய்துவிட்டு லண்டனுக்கு தப்பிச் சென்றுள்ளார். இதனால் அவர் மீது சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் பல்வேறு வழக்குகளை பதிவு செய்துள்ளனர். அத்துடன் அவர் இங்கிலாந்தில் இருந்து இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதோடு  இந்தியாவின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட இங்கிலாந்து அரசும்  இவரை கைது செய்ததுள்ளது. மேலும் விஜய் மல்லையாவை  நாடு கடத்துவதற்கு  லண்டன் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து இங்கிலாந்து அரசு இவரை நாடு கடத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் ஜாமினில் உள்ள விஜய் மல்லையா நாடுகடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இங்கிலாந்தில் உள்ள உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இதுதொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கடன் மோசடி செய்த விஜய் மல்லையாவின் சர்வதேசஅளவிலான  சொத்துக்கள் அனைத்தையும் முடக்க இங்கிலாந்து உயர்நீதிமன்றம்  உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால் கடன் மோசடி செய்த விஜய் மல்லையாவுக்கு எதிராக திவால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் அவரது சொத்துக்களை முடக்குவதற்கு இந்திய வங்கிகளுக்கு நிபந்தனையற்ற அனுமதி வழங்கியுள்ளது.

Categories

Tech |