விஜய் மல்லையா பணம் மோசடி வழக்கில் இன்று தீர்ப்பு அளிப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்திய வங்கிகளில் 9 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்த விஜய் மல்லையா இங்கிலாந்தில் இருக்கிறார் என்பது தெரியவந்துள்ளது. இந்த நிலையில் இங்கிலாந்தைச் சேர்ந்த டால்ஜியோ நிறுவனம் மூலம் தன்னுடைய மகன் சித்தார்த், மகள்கள் தனியா, லியானா ஆகியோருக்கு 40 மில்லியன் அமெரிக்க டாலர்களை விஜய் மல்லையா மாற்றி இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டது. அதன்பின் அவர் தலைமறைவாகி விட்டார்.
இந்த காரணத்தால் அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு போடப்பட்டிருந்தது. 2017ல் இந்த வழக்கில் தலைமறைவுக் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட நிலையில், இந்த உத்தரவை மறு ஆய்வு செய்ய வேண்டுமென்று மல்லையா சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனால் தொழிலதிபர் விஜய் மல்லையாவின் மீது தொடரப்பட்ட வழக்கில் தீர்ப்பு இன்று வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.