Categories
சினிமா தமிழ் சினிமா

அஸ்வினை கவனித்து கொள்ளும் விஜய் மேனேஜர்…. வெளியான தகவல்…!!!

குக் வித் கோமாளி பிராபலம் அஸ்வினின் பட வேலைகளை யார் கவனித்து கொள்ள போகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த குக் வித் கோமாளி  நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. சமீபத்தில் முடிந்த இந்நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் கனி டைட்டில் வின்னர் ஆனார். இதை தொடர்ந்து இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவரும் படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

அந்த வகையில் இந்நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான அஸ்வின் தற்போது நான்கு படங்களில் கமிட்டாகி உள்ளார். இந்நிலையில் நடிகர் அஷ்வினின் பட வேலைகளை இனி ஜெகதீஷ் என்பவர் பார்த்துக் கொள்ள போகிறார். இந்த ஜகதீஷ் யார் என்றால் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் விஜயின் மேனேஜர் ஆவார். இவர் பல நடிகர்களின் பட வேலைகளை கவனித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |