இசை வெளியீட்டு விழாவை விஜய் மிக சரியாக பயன்படுத்தியுள்ளார் என்று நடிகர் கமல் ஆதரவு தெரிவித்துள்ளார்.
பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை தாம்பரம் பகுதியிலுள்ள சாய்ராம் பொறியியல் கல்லூரியில் பிரமாண்டமாக தொடங்கி நடைபெற்றது. இதில் பல்வேறு திரைப்பட பிரபலங்கள் பங்கேற்றனர். இதில் பேசிய நடிகர் விஜய்யின் பேச்சு பலரையும் கவர்ந்தது.சமீபத்தில் உயிரிழப்பை ஏற்படுத்திய பேனர் விவகாரத்தில் ஆளும் அரசை கடுமையாக சாடினார் நடிகர் விஜய்.
சுபஸ்ரீ விஷயத்தில யாரை கைது செய்யணுமோ அவங்கள கைது செய்யாமல் பிரிண்டிங் பிரஸ் வைத்தவரை கைது பண்ணியிருக்காங்க என்று அதிமுகவை விஜய் சீண்டினார். இது குறித்து மக்கள் நீதிமைய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கூறுகையில் , இசை வெளியீட்டு விழாவை விஜய் மிக சரியாக பயன்படுத்தியுள்ளார் என்று சுபஸ்ரீ மரணம் குறித்த நடிகர் விஜய் கருத்துக்கு கமல்ஹாசன் ஆதரவு தெரிவித்தார். மேலும் தாய் மொழி மீது கை வைத்தால் மன்னிக்கமாட்டோம் என்றும் எச்சரித்தார்.