பிரபல நடிகர் விஜயின் திரைப்படத்தில் தந்தை கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு முன்னணி மூத்த நடிகர் மறுப்பு தெரிவித்துள்ளார்.
தளபதி விஜய் அவர்கள் சென்ற 25 ஆண்டுகளாகவே உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஆதிக்கம் செலுத்தி வருகிறார். அதனைத் தொடர்ந்து பாக்ஸ் ஆபிஸில் சென்ற ஐந்து ஆண்டுகளாக சிறந்து விளங்கியும், சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு இணையாகவும் இருந்து வருகின்றார். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜயின் நடிப்பில் உருவான மாஸ்டர் படமானது விரைவில் வெளிவர உள்ளது. இத்தகைய நிலையில் நடிகர் விஜயுடன் நடிப்பதற்காக அனைவரும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து விஜய்யின் அடுத்த படத்தில் அவருக்கு தந்தையாக நடிக்க பிரபல மூத்த முன்னணி நடிகரான மைக் மோகன் அவர்கள் மறுப்பு தெரிவித்துள்ளார். அதற்கான காரணம் என்னவென்று கேட்கையில், இது போன்ற தந்தை கதாபாத்திரத்தில் நான் நடிக்க விரும்பவில்லை என்று மறுப்பு கூறிவிட்டார்.