Categories
சென்னை மாநில செய்திகள்

“துப்பாக்கி சூடு வழக்கு” குற்றவாளி விஜய் நீதிமன்றத்தில் சரண்….!!

சென்னை தாம்பரம் அருகே பாலிடெக்னிக் மாணவன் சுட்டு கொல்லப்பட்ட வழக்கின் குற்றவாளியான விஜய் என்பர் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டம் வேங்கடமங்கலம் பகுதியில் வசித்து வருபவர் விஜய். இன்று வீட்டிற்கு  பாலிடெக்னிக் மாணவர் முகேஷ்  சென்றுள்ளார். இருவரும் நண்பர்கள்  என்பதால் வீட்டில் இருந்து இரண்டு பேரும் பேசிக் கொண்டிருந்தார்கள்.  அப்போது திடீரென்று வீட்டில் இருந்து துப்பாக்கி சத்தம் கேட்டு உடனடியாக  அங்கிருந்தவர்கள் வீட்டுக்குள் சென்று  பார்த்த போது முகேஷ் தலையில் குண்டு காயத்துடன் உயிருக்கு போராடிய நிலையில் இருந்தார்.

Image result for பாலிடெக்னிக் மாணவன் துப்பாக்கி சூடு

இதையடுத்து குரோம்பேட்டை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால்  அங்கே முகேஷ் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்ததார். இதனையடுத்து மாணவன் சுடப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட விஜய் என்பவரை காவல்துறையினர் தேடிவந்தநிலையில், விஜய் தற்போது  செங்கல்பட்டு நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார்.

Categories

Tech |