தமிழ் சினிமாவில் பாகுபலி 2 திரைப்படத்தின் சாதனையை விஜய் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படம் முறியடித்துள்ளது.
கொரோனா பாதிப்பிற்கு பின்பு திரையரங்குகளில் ரசிகர்களுக்கு விருந்தாக ஜனவரி 13 ஆம் தேதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் “மாஸ்டர்”. அந்த படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு காரணமாக இருந்தவர் வில்லனாக நடித்து கெத்து காட்டியுள்ள விஜய்சேதுபதி. மேலும் மாளவிகா மேனன், ஆண்ட்ரியா சாந்தனு, கௌரி கிருஷ்ணா, அர்ஜுன் தாஸ் போன்ற பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இதற்கிடையில் தமிழில் மட்டுமன்றி இந்தி, தெலுங்கு, கன்னட மொழிகளிலும் மாஸ்டர் திரைப்படம் வெளியாகி பெரும் வெற்றி பெற்றுள்ளது.
இந்நிலையில் சமூக இடைவெளி காரணமாக 50% இருக்கைகள் மட்டுமே நிரப்ப வேண்டும் என்றதிலும் படத்தின் வசூல் சிக்ஸர் அடித்தது. தமிழகத்தில் இதுவரை அதிக வசூல் சாதனை படைத்த படமான பாகுபலி 2 படத்தின் வசூலை விட மாஸ்டர் திரைப்படத்தின் வசூல் சாதனை படைத்ததுள்ளது. தயாரிப்பாளர் லலித்குமாரின் தகவலின்படி பாகுபலி-2 படத்தை விட வசூலில் மாஸ்டர் திரைப்படம் முதல் இடத்தை பிடித்து விட்டதாக டிரேடிங் வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர். மூன்று நாட்களில் ரூ . 5000 வரை மாஸ்டர் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டதாகவும் அதனடிப்படையில் கணக்கில் வராத அளவிற்கு மாஸ்டர் வசூல் தொகை இருப்பதாக கூறியுள்ளனர்.
தமிழகத்தில் வசூல் சாதனை படங்கள் டாப் 5 வில் மாஸ்டர் ,பாகுபலி 2, பிகில் ,சர்க்கார் ,மற்றும் மெர்சல். இதில் நான்கு படங்கள் விஜய் நடிப்பில் வெளியானவை என்பதால் விஜயின் அடுத்த படங்களில் மதிப்பும் சம்பளமும் உயர்வாக கிடைக்கும் என்று கூறியுள்ளனர். மேலும் விஜய்யின் 65 படம் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாக உள்ளதாகவும் படத்தின் படப்பிடிப்பு ரஷ்யாவில் ஏப்ரல் மாதம் தொடங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.