பல மொழி படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தும் நடிக்க மறுத்த விஜய்.
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் விஜய். இவரின் படங்கள் வெற்றியாக இருந்தாலும் சரி, தோல்வியாக இருந்தாலும் சரி இவரின் ரசிகர்கள் ஒருபோதும் இவரை விட்டுக் கொடுத்ததில்லை. விஜய்க்கு தெலுங்கு, ஹிந்தி என பல மொழி படங்களில் நடிக்க வாய்ப்புகள் வந்தது. ஆனால் தமிழ் தவிர எந்த மொழியிலும் நடிக்க மாட்டேன் என்பதில் உறுதியாக இருந்தார்.
எனவே, மற்ற மொழி படங்களில் நடிக்க வாய்ப்புகள் வந்தபோதும் அதனை அவர் நிராகரித்தார். மேலும், 2012ஆம் ஆண்டு பிரபுதேவா இயக்கத்தில் இந்தியில் வெளியான ”ரவுடி ரத்தோர்” படத்தில் அக்ஷய் குமாருடன் ஒரு பாட்டுக்கு மட்டும் விஜய் ஆடியிருப்பார். அதுவும் பிரபுதேவா மிகவும் வற்புறுத்தி கேட்டதற்காக மட்டும்தான் அவர் ஆடினாராம். விஜயும் பிரபுதேவாவும் சிறந்த நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மற்ற மொழி படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் நடனம் ஆடிய விஜய் முதல் முறையாக நேரடி தெலுங்கு படத்தில் நடிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.