Categories
சினிமா தமிழ் சினிமா

டெல்லி படப்பிடிப்பை முடித்து விட்டு சென்னை திரும்பிய விஜய்… வெளியான விமான நிலைய வீடியோ…!!!

டெல்லியில் படப்பிடிப்பை முடித்து விட்டு சென்னை திரும்பிய விஜய் விமான நிலையத்திற்க்கு வந்த போது எடுக்கப்பட்ட வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வரும் திரைப்படம் பீஸ்ட். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பிரபல நடிகை பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். மேலும் பிரபல இயக்குனர் செல்வராகவனும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

விறுவிறுப்பாக நடந்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு டெல்லியில் நடைபெற்றது. இதற்காக டெல்லி சென்றிருந்த விஜய் தற்போது டெல்லியின் படப்பிடிப்பை முடித்து விட்டு சென்னை திரும்பியுள்ளார். அதன்படி அவர் விமான நிலையத்தில் இருந்து வந்த வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. மேலும் பீஸ்ட் படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பை ரஷ்யாவில் நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

Categories

Tech |