விஜய் சேதுபதியின் சூப்பர் டீலக்ஸ், நயன்தாராவின் ஐரா ஆகிய படங்கள் இணையத்தில் திருட்டுத்தனமாக வெளியாகியுள்ளது.
சமீப காலமாக திரைக்கு வரும் படங்கள் திரைக்கு வந்த சில மணிநேரங்களில் இணையதளத்தில் வெளியாகி படக்குழுவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தி விடுகின்றன. இதை தவிர்க்க தயாரிப்பாளர்கள் சங்கம் கடும் நடவடிக்கை மேற்கொண்டுள்ள நிலையில், தியேட்டர்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தபட்டும் இதை தவிர்க்க முடிய வில்லை. இதனால் பல முன்னணி நடிகர்களான கார்த்தி, ரஜினி, அஜித், விஜய், சூர்யா, விக்ரம் ஆகியோரின் படங்கள் இது வரை அதிகமாக இணையத்தில் வெளிவந்துள்ளன.
இதே போல் ஜனவரியில் வெளியான விஸ்வாசம், பேட்ட போன்ற படங்கள் திரைக்கு வந்த சில மணி நேரத்தில் இணையத்தில் வெளிவந்தன. இதை தொடர்ந்து தற்போது வெளியாகி திரையில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் விஜய் சேதுபதியின் சூப்பர் டீலக்ஸ், நயன்தாராவின் ஐரா ஆகிய படங்கள் திருட்டுத்தனமாக இணையத்தில் வெளியாகி படக்குழுவினரை அதிர்ச்சியடைய செய்துள்ளது. இவ்விரு படங்களையும் இணையத்திலிருந்து பல்லாயிர கணக்கானோர் பதிவிறக்கம் செய்துள்ளனர். இதனால் இந்த படங்களின் வசூல் பாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.